அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் செயல்முறையை மதிப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தகுதியுடையவர்களாக இருந்தும் இன்னும் சலுகைகள் பெறாதவர்களை உள்ளீடு செய்வதற்கான திட்டங்கள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.