நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (www.plusinfo.lk)
ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஆசிரியர்களால் இடமாற்றம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். (www.plusinfo.lk)
இதனால், பல ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..